மும்பையில் முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.

மும்பை:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி எப்போதுமே சிறப்பாக ஆடுவார். கடந்த தொடரில் 2 சதத்துடன் 310 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரிலும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளார்.

இதேபோல ‘ஹிட்மேனான ரோகித் சர்மாவும், தவானும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுபவர்கள்.

வரிசையில் ஆடும் பட்சத்தில் கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஒருவேளை ஷிரேயாஸ் அய்யர் கழற்றி விடப்பட்டால் அவர் இடம் பெறுவார்.

பந்துவீச்சாளர்கள் ஆல் ரவுண்டர் வரிசையில் ஜடேஜா ஆடுவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஷிவம் துபே இடம் பெற்றால் ஜடேஜா நீக்கப்படலாம்.

வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும், சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவும் இடம்பெறுவார்கள். சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்தால் குல்தீப் கழற்றி விடப்படுவார்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ் கேரி, டர்னர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க், கும்மின்ஸ், ஆடம் ‌ஷம்பா போன்ற சிறந்த பந்துவீச் சாளர்களும் உள்ளனர்.

5 டெஸ்டில் 4 சதம் விளாசிய லபுஷ்சேன் முதல்முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்று உள்ளார்.

இங்கிலாந்தில் ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.

சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இரு அணிகளும் கடைசியாக மோதிய உலக கோப்பை போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. ஆஸ்திரேலியா 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

நாளைய ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முகநூலில் நாம்