முன்னேஸ்வரம் தேவஸ்தான மகோற்சவம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் ஶ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தான மகோற்சவம் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இம் முறை மகோற்சவம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, ஶ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் பிரதம குரு பிரம்ம ஶ்ரீ ச. பத்மநாப குருக்கள் மகோற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாத சுவாமி தேவஸ்தானத்துடைய ஆவணி மாதத்து மகோற்சவம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஶ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் பிரதம குரு பிரம்ம ஶ்ரீ ச. பத்மநாப குருக்கள் தெரிவித்தார்.

ரதோற்சவம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெற இருக்கின்றதாகவும் ஆலயத்தின் பிரதம குரு கூறினார்.

கண்டி தலதா மாளிகை, கதிர்காம் ஆகிய ஆலயங்களிலே பக்தர்கள் அதிகபடியாக ஒன்று கூடாமல் எவ்விதத்தில் பராம்பரிய முறைப்படியாக உற்சவங்கள் நடைபெற்றதோ அதுபோன்று மட்டுப்படுத்தப்பட்ட மக்களோடு மாத்திரம் இந்த உற்சவத்தினை நடத்துவதற்காக தாம் எண்ணியுள்ளதாக பிரதம குரு பிரம்மஶ்ரீ ச. பத்மநாப குருக்கள் விளக்கமளித்துள்ளார்.

முகநூலில் நாம்