முன்னாள் போராளிகளின் தகவல்களை திரட்டுவதானது சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் – அருட்தந்தை சத்திவேல்

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும்
நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே
ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்
இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய
ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன.

என்ன நோக்கத்திற்காக இத் தகவல்கள் திரட்டப்படுகின்றன? என்பது தொடர்பில்
முன்னாள் போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்