முன்னாள் காத­லனின் தாயாரை கொலை செய்த பெண்!

தனது முன்னாள் காத­லனின் தாயாரை தலை துண்­டித்து கொலை செய்த பெண்­ணொ­ருக்கு விதிக்­கப்­பட்ட ஆயுள் தண்­ட­னைக்கு எதி­ரான மேன்­மு­றை­யிட்டை அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று தள்­ளு­படி செய்­துள்­ளது. 

கான்சாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த ரசெல் ஹில்யார்ட் எனும் பெண்­ணுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ரசெல் ஹில்­யார்ட்டும் அவரின் காத­லனும் பல வரு­டங்கள்; ஒனற்hக வசித்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பிரிந்­தனர். அதன்பின் அவ்­வீட்­டி­லி­ருந்து தனது மகனின் உட­மை­களை எடுத்துச் செல்­வ­தற்­காக ரசெலின் காத­லனின் தாயார் மிக்கி டேவிஸ் அவ்­வீட்­டுக்குச் சென்­றி­ருந்தார். 

இதன்­போது மிக்கி டேவி­ஸுடன் ஏற்­பட்ட மோதலில் அவரை ரசெல் ஹில்யார்ட் கொடூ­ர­மாக கொலை செய்தார். 

மிக்கி டேவிஸின் கழுத்தை ரசெல் கத்­தியால் வெட்டித் துண்­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. மிக்கி டேவிஸின் 9 வயது பேரன் பார்த்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் இக்­கொலை இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நான் உணர்ச்­சி­வ­சப்­பட்டு விட்டேன். நாம் இரு­வரும் கராஜில் கட்டிப் புரண்டோம் என நீதி­மன்­றத்தில் ரசெல் தெரித்தார். 

ஓவியம் ஒன்று தொடர்­பாக இவ்­வி­ரு­வ­ருக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­ட­தா­கவும் ரசெல் கூறி­யி­ருந்தார்.

இக்­கொலை தொடர்­பில ரசெல் ஹில்­யார்ட்­டுக்கு ஆயுள் தண்­டனை விதித்து 2020 ஆம் ஆண்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. 

இத்­தீர்ப்­புக்கு எதி­ராக ரசெல் மேன்­மு­றை­யீடு செய்திருந்தார்.  இம்மேன்முறையீட்டு மனுவை கான்சாஸ் உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்