முந்திரிகை செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு!

பூநகரி, வெள்ளான்குளம் ஆகிய கிராமங்களில், முந்திரிகைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட குடும்பங்களை மய்யப்படுத்தி, அடுத்த இரண்டு வாரத்துக்குள் சட்ட ரீதியான சமூக குழுக்களை உருவாக்க வேண்டுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் மாகாண விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில், அண்மையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே, ஆளுநர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், முந்திரிகை தோட்டங்களின் நில உரித்துகளை, ஒவ்வொரு தனித்தனியான குடும்பங்களுக்குடையதாக மாற்றுவது தொடர்பில், பின்னர் தீர்மானிக்க ப்படவுள்ளதாகவும், இதன்போது அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்