முதல் டெஸ்ட் முதல்நாளில் பாகிஸ்தான் அதிரடி  ஆட்டம் 

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் இமாம் உல் ஹக் 132 ஓட்டங்களுடனும் அசார் அலி 64 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது முதல்நாளில் அப்துல்லா சபீக் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அந்த விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார்.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்