முதல் டி20: ஜிம்பாப்வேயை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தமிம் இக்பால் (33 பந்தில் 41 ரன்), லிட்டோன் தாஸ் (39 பந்தில் 59 ரன்) சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அடுத்து வந்த சவுமியா சர்கார் ஆட்டமிழக்காமல் 32 பந்தில் 62 ரன்கள் விளாசினார்.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வங்காளதேசம் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசி ஜிம்பாப்வே 69 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

கடைநிலை வீரர்கள் திரிபானோ (13 பந்தில் 20 ரன்), கார்ல் மும்பா (16 பந்தில் 25 ரன்), முடும்பாமி (13 பந்தில் 20) ரன்கள் அடிக்க 152 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி சார்பில் முஷ்டாபிஜுர், அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முகநூலில் நாம்