முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி 109 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்