முட்டாள் செய்த வேலை, ப்ரியா பவானி ஷங்கர் காதல் சர்ச்சை குறித்து கொந்தளித்த எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர். இவர் தற்போது ஹீரோவாகவும் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் நடிப்பில் வந்த மான்ஸடர் படம் சூப்பர் ஹிட் ஆனது, இந்நிலையில் இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.

இவர் மீண்டும் பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியாவிடம் காதலை சொன்னதாக ஒரு தகவல் பரவியது.

அதோடு, அந்த காதலை ப்ரியா மறுத்ததாகவும் வதந்திகள் பரவ, எஸ்.ஜே.சூர்யா செம்ம கோபமாகிவிட்டார், தற்போது டுவிட்டரில் ‘இது வதந்தி தான், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

முகநூலில் நாம்