
இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.