முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட இரு மடங்கிற்கும் அதிகமாக தற்போதைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்