
நாட்டில் தற்போதுள்ள கொவிட் சூழ்நிலையில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க இதுவரை முடிவு செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சின் COVID-19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், நெரிசலான இடங்களிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ தனது சொந்த பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிய வேண்டும். தங்கள் உயிரை தாங்கள்தான் பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.என்றும் மருத்துவர் வலியுறுத்தினார்.