மீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி! நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ

TRP ரேட்டிங்கில் ஒவ்வொரு வாரமும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனை உடனுக்குடன் நாங்கள் உங்களுக்கு தெரிவித்து வருகிறோம்.

கொரோனா காரணமாக சீரியல்கள் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்தது. சமீபத்தில் மிகவும் கிழே சரிந்திருந்த விஜய் டிவியின் TRP ரேட்டிங் சென்ற வாரத்திற்கு முன் நல்ல வாளர்சியை கான துவங்கி 2ஆம் இடத்தை பிடித்தது.

ஆனால் தற்போது மீண்டும் மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்து, 302111 பார்வையாளர்களை பெற்று 3 ஆம் இடத்திற்கு கிழே தள்ளப்பட்டுள்ளது.

மேலும் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி, 316327 பார்வையாளர்களை பெற்று 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது ஜி தமிழ்.

இந்நிலையில் என்றும் நம்பர் 1 என்று தற்போதும் நிரூபித்துள்ளது சன் டிவி. ஆம், 853698 பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது சன் தொலைக்காட்சி.

மேலும் கே டிவி 293768 பார்வையாளர்கள் பெற்று 4 ஆம் இடமும், மற்றும் விஜய் சூப்பர் 162469 பார்வையாளர்கள் பெற்று 5ஆம் இடமும் பிடித்துள்ளது.

முகநூலில் நாம்