
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மேலும் பல கோடி ரூபாய் செலவில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கிய முதல் நிறுவனமாக மாறியது.
இம்மாதம் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும். இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.