மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்? தளபதி 65? முழு விவரம் இதோ

மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க போவதாகவும், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க வுள்ளதாகவும் மேலும் இந்த படம் தான் விஜய்யின் 65 படமாக இருக்கும் என்றும் சில தகவல்கள் பரவி வந்தது.

மேலும் லோகேஷுடன் பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது என தெரியவந்துள்ளது, ஆனால் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது என்பது உண்மையல்ல முற்றிலும் தவறான ஒரு தகவல் என்று தற்போது தெரியவந்துள்ளது.

முகநூலில் நாம்