மீண்டும் நிரூபித்தார்  சதுரங்கப்போட்டியில்  பிரக்ஞானந்தா

வேலம்மாளின் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் 2022  இணையவழி விரைவுச்  சதுரங்கப்போட்டியில்    மீண்டும் தனது திறமையை நிரூபித்தார் .

2022 பிப்ரவரி 21 அன்று நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்  எனப்படும் இணையவழி விரைவுச் சதுரங்கப் போட்டி –

2022 இல்  எட்டாவது சுற்றில்  சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா உலகத்தரம் வாய்ந்த சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தனது அபார திறமையின் மூலம் வியப்பில் ஆழ்த்தினார். 

பிரக்ஞானந்தா-வின் இந்த அற்புதமான வெற்றியானது 39 நகர்வுகளில் கறுப்பு சதுரங்கக் காய்களுடன் முடிவுக்கு வந்தது, 

இதன்மூலம் கார்ல்சனின் மூன்று தொடர் வெற்றிகளை முடிவுக்கு கொண்டு வந்த  பிரக்ஞானந்தா மேக்னஸை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக சாதனை படைத்தார். 

 
வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சதுரங்கச் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் சிறப்பான சாதனையைப் பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்