மீண்டும் நகைச்சுவை நடிகர் வடிவேல்

நடிகர் வடிவேல் திரைப்படங்களில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேல் மீது இயக்குநரும் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட போது இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு காரணமாக நடிகர் வடிவேல் மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அவருக்கு திரைகப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது நடிகர் வடிவேல் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்