மீண்டும் தோனி ஆட்டம்…

மும்பை: மீண்டும் எம்.எஸ்.தோனியின் ஆட்டத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பதே இந்த ஐபிஎல் தொடரின் ஹைலைட்டாக இருக்கும் என்று முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர சேவக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அனைவருக்குமே‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ அனுபவமாக இருக்கும். வீரர்களுக்கு மட்டுமல்ல… ரசிகர்களுக்கும் தான். அதோடு, தோனி மீண்டும் களமிறங்குவது மிகப் பெரிய ஹைலைட். அவர் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளது.

நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன… இதை விட வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன? ஊரடங்கு காலத்தில் பழைய போட்டிகளின் வீடீயோக்களை பார்த்து ரசித்தேன். என்னுடைய ஆட்டம் உட்பட பல வீரர்களின், அணிகளின் செயல்பாட்டை அலசி ஆராய்ந்தேன். இந்தியர்களின் மரபணுவிலேயே கிரிக்கெட் ஊறிப் போயிருக்கிறது. அந்த அற்புதமான விளையாட்டுக்காக நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு சேவக் கூறியுள்ளார். நாளை மறுநாள் நடக்க உள்ள ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்