மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்! மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளினால் வழங்கிய தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் இணைந்து விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீள் அறிவிப்பு வரை பெற்றோர் கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜூலை ஆறாம் திகதியே மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்