மீண்டும் கிரிக்கெட்டில் இலங்கை ஜாம்பவான் சங்ககாரா: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் தலைவர் என அறிவிப்பு

பாகிஸ்தானில் சர்வேத கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறவுள்ள டி20 தொடரில், எம்.சி.சி அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார்சங்ககாரா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிற்கு உலகில் இருக்கும் முக்கிய அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

சமீபத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின்னரும் எந்த ஒரு அணியும் பாகிஸ்தானிற்கு சென்று விளையாட முன் வரவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் விதமாக, உலக கிரிக்கெட் குழு Marylebone Cricket Club’s (MCC) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக 12 பேர் கொண்ட அணியை MCC அறிவித்துள்ளது. இதில் இலங்கை அணியின் ஜாம்பவானான குமார் சங்ககாரா அணியின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயண்ம் மேற்கொண்டு விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த MCC அணியில் சங்ககாராவை தொடர்ந்து, முன்னணி வீரர்கள் பலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்