மீண்டுமொரு  ஆப்கானை உலுக்கிய சம்பவம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 57 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானின் ஷியா சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் வசிக்கும் பகுதியிலேயே இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) ஆயுதக் குழுவினால் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரி பல வெடிபொருட்களை தனது உடலில் கட்டியவாறு குறித்த கல்வி நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தியும் உள்ளனர்.

இதனால் அவர் தனது உடலில் கட்டியிறுந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்துள்ளார் என உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்துள்ளார்.

காபூலின் அதே பகுதியில், 2018 இல் மற்றொரு கல்வி நிலையம் மீதான தாக்குதலில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த மே மாதத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஒரு மகப்பேறு வைத்தியசாலையில் தாக்குதல் நடத்தி, தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேரை கொன்றனர்.

இந் நிலையில் தற்போதைய தாக்குதலுக்கான பொறுப்பை தலிபான் மறுத்ததுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கட்டாரில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் அண்மைய வாரங்களில் ஆப்கானில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்