மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணி போட்­டியில் ‘மேக் அப்’ அலங்­கா­ர­மின்றி யுவ­தி­யொ­ருவர் பங்­கு­பற்றி புதிய சாதனை

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணி போட்­டியில் ‘மேக் அப்’ அலங்­கா­ர­மின்றி யுவ­தி­யொ­ருவர் பங்­கு­பற்றி புதிய வர­லாறு படைத்­துள்ளார். 

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணி போட்­டியில் ‘மேக் அப்’ அலங்­கா­ர­மின்றி யுவ­தி­யொ­ருவர் பங்­கு­பற்றி புதிய வர­லாறு படைத்­துள்ளார். 

மெலிசா ரவூப் எனும் இந்த யுவதி மிஸ் இங்­கி­லாந்து 2022 இறுதிப் போட்­டிக்கும் தகுதி பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணி போட்டி 1928 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. 94 வருட காலத்தில் மேக் அப் இல்­லாமல் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றிய முதல் போட்­டி­யாளர் மெலிசா ரவூப் ஆவார்.

20 வய­தான மெலிசா ரவூப் லண்­டனைச் சேர்ந்­தவர். அர­சியல் துறையில் உயர் கல்­வியை பயிலும் மாணவி அவர். 

கடந்த வாரம் நடை­பெற்ற, மிஸ் இங்­கி­லாந்து 2022 அழ­கு­ராணி அரை இறுதிப் போட்­டியில் நடு­வர்­களைக் கவர்ந்து இறுதிப் போட்­டி­க­ளுக்கு அவர் தகுதி பெற்றார். 

இறுதிச் சுற்­றுப்­போட்டி எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. அச்­சுற்­றிலும் மேக் அப் அலங்­கா­ர­மின்­றியே தான் பங்­கு­பற்றப் போவ­தாக மெலிசா ரவூப் தெரி­வித்­துள்ளார்.

மிஸ் இங்­கி­லாந்து போட்­டி­களில் 2019 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக, வெற்று முகம் (பார் பேஸ்) எனும் விரு­தையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. முதல்­த­ட­வை­யாக அவ்­வி­ருதை மெலிசா ரவூப் வென்­றுள்ளார்.

தமது இயற்­கை­யான அழகை வெளிப்­ப­டுத்­து­வதில் இளம் பெண்­களை ஊக்­கு­விப்­ப­தற்கு தான் விரும்­பு­வ­தாக மெலிசா ரவூப் கூறு­கிறார்.

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணி போட்­டி­களின் ஏற்­பாட்­டாளர் ஏன்ஜி பீஸ்லே இது தொடர்­பாக கூறு­கையில்

‘பெரும்­பா­லான போட்­டி­யா­ளர்கள் அதி­க­மாக மேக்அப் அணிந்­து­கொண்ட பிடிக்­கப்­பட்ட படங்­க­ளையும் அதி­க­மாக எடிட் செய்­யப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளையும் சமர்ப்­பிக்­கி­றா­ரகள். அந்த மேக்­அப்­புக்கு பின்­னா­லுள்ள உண்­மை­யான நபரை காண நாம் விரும்­பினோம். அதனால் தான் 2019 ஆம் ஆண்டு ‘வெற்று முக’ சுற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேக் அப்­க­ளுக்குப் பின்­னாலும்  சமூக வலைத்­த­ளங்­களில் ஃபில்­டர்­க­ளுக்குப் பின்­னாலும் மறைந்­து­கொள்ள வேண்­டிய தேவை­யின்றி தாம் யார் என்­பதை பெண்கள் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சுற்று ஊக்­கு­விக்­கி­றது’ எனத் தெரி­வித்­துள்ளார். 

இது தொடர்­பாக மெலிசா ரவூப் மேலும் கூறு­கையில், ‘பல்­வேறு வய­து­டைய யுவ­தி­களும் மேக் அப் அணி­வ­தற்கு காரணம், அதை செய்­வ­தற்­கான அழுத்­தத்தை தாம் எதிர்­கொள்­வ­தாக அவர்கள் நம்­பு­வதே காரணம் என கரு­து­கிறேன். 

ஒருவர் தனது சொந்த தோல் குறித்து மகிழ்ச்சி கொண்­டி­ருந்தால் முகத்தை மேக் அப்பில் மறைத்­து­க்­கொள்ளக் கூடாது. எமது  குறை­களே நாம் என்­பதை உரு­வாக்­கு­கின்­றன. 

அதுவே எம் ஒவ்­வொ­ரு­வ­ரையும் தனித்­தன்­மை­யா­ன­வர்­க­ளாக ஆக்­கு­கி­றது’  என கூறு­கிறார்.

சிறு­வ­யதில் தான் மேக் அப் அணிந்த போதிலும், அழ­கு­ராணி போட்­டியின் மேக் அணியும் பாரம்­ப­ரி­யத்தை வேண்­டு­மென்றே தான் தவிர்த்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

‘அழகுத் தராதரங்களை நான் அடைந்துவிட்டதாக நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. 

எனது தோல் அழகானது என்பதைத அண்மையில் தான் நான் ஏற்றுக்கொண்டேன். அதனால் தான் மேக் அப் இல்லாமல் போட்டியில் பங்குபற்றுவதற்கு நான் தீர்மானித்தேன்’ எனவும் மெலிசா ரவூப் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்