மிளகு ஏற்றுமதி அபிவிருத்திக்கு புதிய திட்டம்!

முக்கிய ஏற்றுமதி பயிராக மிளகுப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு உடனடியாக திட்டமொன்றை தயாரிப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து மிளகை கொள்வனவு செய்யும் முக்கிய நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியா கொள்வனவு செய்வது கோட்டா முறைமைக்கு அமையவாகும். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு மேலதிகமாக சுதேச மிளகுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரத்தினபுரி மாவட்டத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கொடக்காவெல பிரதேச சபை விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே, இவ்வாறு தெரிவித்தார்.

சப்ரகமுவ சமன் தேவாலயத்தை அண்டிய பாரம்பரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

முகநூலில் நாம்