மிருகங்களுக்கு சீனா ஆப்பில்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட  24,000 கிலோ கிராம் ஆப்பிள், தெஹிவளை மிகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம், அவை இன்று (10) கையளிக்கப்பட்டன.

கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு, பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து குறித்த ஆப்பிள் கொள்கலன்கள் (கென்டய்னர்கள்) வந்துள்ளனர்.

அந்த ஆப்பிள் கொள்கலன்களை, இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே, சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, அவற்றை மிருகக்காட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இறக்குமதிச் செய்யப்பட்டவர்களால், பொருள்கள் கொள்வனவு செய்யப்படவில்லை எனில், அவற்றை வீணாக்காமல், அழிக்காமல், பிரயோசனமான விடங்களுக்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு துறைமுக அதிகாரிகளுக்கு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கொள்கலன்களில் 24,000 கிலோ கிராம் நிறை கொண்ட அதாவது சுமார் ஒரு இலட்சம் ஆப்பிள்கள் இருப்பதாக சி.அய்.சி.டி நிறுவனத்தின் பிரதானி ஜெக் உவாங் தெரிவிக்கின்றார். 

 அந்த ஆப்பிள் தொகையின் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதிவாய்ந்தவை என துறைமுகத்தின் பணிப்பாளர் பிரபாத் ஜயன்த தெரிவிக்கின்றார்.

இந்த ஆப்பிள் கொள்கலன்களை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையும் சி.அய்.சி.டி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

ஆப்பில் கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரசன்ன ஜயமான்ன உப தலைவர் கயான் அலகியவத்தகே மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.சி.ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்