மிரட்டலான தோற்றத்திற்கு மாறிய இளம் நடிகை! லேட்டஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹீரோ

நடிகை ரெஜினா கசண்ட்ரா கண்ட நாள் முதல் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் இவரை பிரபலமாக்கியது.

பின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தெலுங்கிலும் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களுக்கு பின் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்டிபடத்தில் நடித்துள்ளார்.

கள்ள பார்ட், கசட தபற, சக்ரா, அருண் விஜய்யுடன் படம், சுதீர் வர்மா இயக்கத்தில் ஒரு படம் என கையில் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் அடுத்தாக உள்குத்து, திருடன் போலிஸ் படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு சூர்ப்பனகை என டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படம் தெலுங்கில் நீனேனா என்ற பெயரில் வெளியாகிறது. ராஜ் சேகர் வர்மா இப்படத்தை தயாரிக்க சாம் சி எஸ் இசையமைக்கிறாராம்.முகநூலில் நாம்