மியன்டாட் இளையோர் அணியை வீழ்த்தியது சன்பிளவர் இளையோர்

சாய்ந்தமருது மியன்டாட் இளையோர் அணியின் புதிய சீருடை அறிமுகம் மற்றும் கடின பந்து கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழக இளையோர் அணி போட்டியினை ஏற்பாடு செய்த சாய்ந்தமருது மியன்டாட்  விளையாட்டு கழக இளையோர் அணியினரை 6 விக்கெட்டுகளால் வென்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக “றபீக் கென்ஸ் ரக்ஸன் “ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யு.எல். றபீக் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை  வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்