
இன்றைய தினம் தென் மாகாணத்திற்கு மாத்திரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினம் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
போதியளவு எண்ணெய் கையிருப்பு மற்றும் நிதி உள்ள காரணத்தினால் நாளை (21) ஏனைய பிரதேசங்களில் மின்வெட்டு தேவைப்படாது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, நாளை 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.