
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில்
முன்வைக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும்,
மின் உற்பத்திக்கான செலவினத்தையும் கருத்திற்கொண்டு மின்கட்டணத்தை
அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, 2023ஆம்
ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண திருத்தம், அதிக தாக்கத்தை செலுத்தும் என
தெரிவிக்கப்படுகிறது.