
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, பழைய லக்சபான நிலையம் சேவையில் இன்மை ஆகிய காரணங்களால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.