
இலங்கையில், 2019 ஆம் ஆண்டில் மின்சார விபத்துகள் காரணமாக 103 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டில், தென் மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 30 ஆக காணப்படுவதாக, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் , 2019 ஆம் ஆண்டில், மின்சார விபத்துகளால் மேற்கு மாகாணத்தில் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதே காலப்பகுதியில், ஏனைய மாகாணங்களில் பதிவான மின்சார மரண வீதங்களுடன் ஒப்பிடும்போது, இது நாட்டில் ஏற்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாக கருத்தப்படுகிறதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.