
இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.