
மின்சார கட்டண உயர்வு தொடர்பில் வலுசக்தி மற்றும் மின்சாரதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிற்கும் இலங்கையின் மின்சார சபையின் தலைமைக்கும் இடையில் .கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன.
மின்கட்டணஙகளை அதிகரிகக்வேண்டும் என இலங்கை மின்சார சபை அமைச்சரவைக்கு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களிற்கு இலங்கை மின்சார சபை ஆதரவளிக்காததன் காரணமாகவே மின்கட்டண அதிகரிப்பு குறித்த அதன் வேண்டுகோள்களை ஏற்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சொந்த சம்பளங்களிற்காக மின்கட்டணங்களை அதிகரிப்பதற்கு பதில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களிற்கு இலங்கை மின்சார சபை அனுமதியளிக்கவேண்டும் உற்பத்தி செலவை குறைக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூன்று வருடங்களிற்கு ஒருமுறை தங்கள் வேதனங்களை 25 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தமொன்று இலங்கை மின்சார சபையிடம் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் மீள்புதுப்பித்தக்க சக்தி குறித்த திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் – உற்பத்தி செலவு குறைக்கப்படாத நிலையில் மின்சார சபையின் வேதனம் மற்றும் மின்சார உற்பத்தி செலவுகளை நுகர்வோர் மீதே திணிக்கும் நிலை காணப்படுகின்றது இதனை மாற்றவேண்டும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.