மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரை ஆற்றில் வீசிய நபர்!

பெல்மடுல்ல, கமேகம, தெனவக்க ஆற்றில் இருந்துசடலங்களாக மீட்கப்பட்ட இரண்டு ஆண்களின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

காட்டு பன்றியை வேட்டையாட நபரொருவரால் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய நிலையில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மின் வேலியை அமைத்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய குறித்த நபர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்களை அருகில் இருந்த ஆற்றில் குறித்த நபர் வீசியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் நாம்