மின்சாரப் பட்டியலில் பிரச்சினை இருப்பின் அறிவிக்கவும்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்கான மின்சாரப் பட்டியல் தற்போது வழங்கப்பட்டுவரும் நிலையில், அதில் ஏதேனும் பிரச்சினை காணப்படின் அது தொடர்பில் உடன் அறியத்தருமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, 0122-392607 அல்லது 0112-392608 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்