மின்சாரத்தால் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே சம்வத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சார வயர் வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்தது.

தவழ்ந்து சென்ற குழந்தை வயரினை இழுத்துள்ளது. இதன் போது வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று காட்டிய போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்