மின்கம்பத்துடன் கார் மோதி விபத்து!

கார் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நீர்வேலி பூதர்மடம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்ட போது வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதிஉயர் மின்னழுத்த கம்பம் மீது மோதிய போது காரின் Airbag உடனடியாக வெளிவந்தால் சாரதியும் அவருக்கு அருகில் இருந்து பயணித்தவரும் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சார சபைக்கு அறிவித்ததையடுத்து மின்சார ஊழியர்கள் வருகைதந்து மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்