மாவட்ட வாரியாக தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதனை தவிர வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேட்சைக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

கொழும்பு 19

கம்பஹா – 18

களுத்துறை – 10

கண்டி – 12

மாத்தளை- 05

நுவரெலியா – 8

காலி – 9

மாத்தறை- 07

ஹம்பாந்தோட்டை -07

யாழ்ப்பாணம் – 07

வன்னி – 06

மட்டக்களப்பு- 05

திகாமடுல்லை (அம்பாறை) -07

திருகோணமலை -04

குருணாகல் -15

புத்தளம் – 08

அனுராதபுரம் -09

பொலன்நறுவை -05

பதுளை -09

மொனராகலை -06

இரத்தினபுரி – 11

கேகாலை -09

முகநூலில் நாம்