
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து
மீள வேண்டுமாயின் அரசியலமைப்பினால் அதிகாரம் வழங்கப்பட்ட வகையில் மாவட்ட
அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.
மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.
வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண
வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுதந்திர
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.