மாலைவேளை இடம்பெற்ற விபத்து! உந்துருளி செலுத்துனருக்கு ஏற்பட்ட நிலை!

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஹட்டன் பிரதான வீதியின் டிக்கோயா புளியாவத்தை பகுதியில் நீர் ஏற்றிசென்ற பெளசரும் மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று மாலை 04.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் இருந்து சாஞ்சிமலை பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும், புளியாவத்தையில் அமைந்துள்ள கழிவுத் தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பெளசர் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிலை செலுத்திய நபர் கனரக ஊர்தியில் அகப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு பெளஸர் வண்டியின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முகநூலில் நாம்