மாலுமிகள் இடைமாறலை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கை ஊடாக முன்னெடுக்கப்படும் மாலுமிகள் இடைமாறும் முறையை உடனடியாக இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் ​பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வரும் மாலுமிகள் தாம் பணியாற்றும் கப்பல்களுக்கு இடைமாறும் மத்திய நிலையமாக கொழும்பு துறைமுகத்தை கடந்த சில வாரங்களாகப் பயன்படுத்தி வந்ததாகவும் இந்த செயற்பாட்டையே ஜனாதிபதி நிறுத்தியுள்ளதாக ​அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு வரும் மாலுமிகள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இவர்களுக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முகநூலில் நாம்