மாரடைப்பால் வில்லன் நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி 

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார் என்ற செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. மே 8, 1946 இல் பிறந்த ஜெயபிரகாஷ் ரெட்டி பிரம்மபுத்ருது என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார். அங்குள்ள ராயலசீமா பேச்சுவழக்கு மூலம் தனக்கென சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றார்.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்து ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் தமிழிலில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்