மான்செஸ்டர் டெஸ்ட்: முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்த இங்கிலாந்து!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. போட்டி இந்திய நேரப்படி நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

மழை நின்று, அவுட் பீல்டு உலர்ந்ததால் டாஸ் சுண்டப்பட்டது, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து இங்கிலாந்தின் ரோய் பர்ன்ஸ், டொமினிக் சிப்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பர்ன்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீசின் ரோஸ்டன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய சக் (0) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்ட ஜோ ரூ சற்று நிதானமாக ஆடி 23 ரன்களை சேர்த்து ஜோசப் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், சிப்லியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக ஆடிய சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் அரை சதம் கடந்தனர். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.

சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முகநூலில் நாம்