மாநாடு சிம்புவின் அடுத்த அதிரடி! ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இதன் படப்பிடிப்பு சென்னை புறநகரில் கடந்த திங்கள் கிழமை தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தள புகைப்படமும் வெளியானது.

நடிகை ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தில் சிம்பு “ஜமீல்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேமியோ ரோல் போல சிம்பு வந்து போகும் இப்படத்தை ஜமீல் இயக்க மதியழகன் தயாரித்துள்ளார்.

படத்தின் கதை கோவாவில் 30 வருடங்களுக்கு முன் பைலட் ஜமீல் என்பவரை மையமாக கொண்ட உண்மை சம்பவமாம். சிம்பு இவரின் ரோலில் தான் நடித்துள்ளாராம்.

ஹன்சிகா, சிம்பு இருவரின் லுக் மிகவும் சூப்பராக இருக்கும், விரைவில் டீசர் வரவுள்ளது, இதன் கவுண்டன் இம்மாதம் தொடங்கிவிட்டது என இயக்குனர் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்