
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்று நிரூபத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை செயற்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த சிக்கல்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள், சுற்றுநிரூபத்தை திருத்துவதற்கான குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியன தமது யோசனைகளை முன்வைத்திருந்தன.
இதற்கமைய திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபத்தை 2023 ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.