மாணவர்களின் வவுச்சர் காலாவதி திகதி நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இத்தகவலை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை குறித்த வவுச்சர்கள் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வவுச்சர்கள் நாளையுடன் காலாவதியாக இருந்த நிலையில் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்