மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் காரணமாக இடைநிறுத்தப்பட்டு இருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை மீண்டும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிக அவதானம் மிக்க வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு இவ்வாறு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது.

போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய இன்று முதல் பஸ் சேவைகள் இடம்பெறுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்