
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய
இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7
நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக
அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில்
ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த
ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும்
லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு
எதிராக கனேடிய அரசாங்கம் பல்வேறு முக்கிய தடைகளை விதித்தது.
இந்நிலையிலேயே சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர்
மெலின் ஜோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.