மஸ்கெலியாவில் மண்சரிவு!

மஸ்கெலியா, நல்லதண்ணி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று (07) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மோகினி நீர்வீழ்ச்சியின் அருகில் ஏற்பட்டுள்ள மண் திட்டு சரிவில் கற்பாறைகள் காணப்படுவதால் நல்லத்தண்ணி – மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் மறே – மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி நகரில் இருந்து செல்லும் பயணிகள் மற்றும் மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் பயணிகளின் போக்குவரத்து லக்சபான வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்