மழை வானிலையால் விவசாயம் பாதிப்பு!

மலையகத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, விவசாயச் செய்கைகள் நாசமடைந்துள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை, டயகம, கொட்டகலை, தலவாக்கலை, லிந்துலை, மன்றாசி, மெராயா, ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ பசுமலை உள்ளிட்ட பிரதேசங்களில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்ததால், இப்பிரதேசத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்தன.

இதனால் விவசாய காணிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதேவேளை, தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த கோவா, போஞ்சி, கரட், உருளைக்கிழங்கு, கறிமிளகாய், இலை கோவா, லீக்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து மரக்கறி வகைகளும் வெள்ள நீரினால் அடித்துசெல்லப்பட்டுள்ளன.

இதனால், விவசாயிகள் பாரய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

முகநூலில் நாம்