மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்த துரைசாமி விஜிந்த்

நேபாளத்தில் இடம்பெற்ற Indo Nepal international விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்றி மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்த பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் அவர்களுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இடம்பெற்ற Indo Nepal international விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக மலையகத்தை சேர்ந்த துரைசாமி விஜிந்த் பங்குப்பற்றி உயரம் பாய்தலில் (master athletic) தங்கப் பதக்கத்தையும் வேக நடை போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பல போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதோடு, அயராது முயற்சி செய்து மலையகத்திற்கும் எமது நாட்டிற்கும் பெருமை சேர்த்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்